முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டோர் விவரம் வவுனியா செயலகத்தில் பார்வைக்கு
UTHAYAN 2009-11-18
பஸில் ராஜபக்ஷ நடவடிக்கை
வன்னியில் இருந்து இடம்பெயர்ந்து வவுனியா அகதி முகாம்களில் தங்கியிருந்த வேளை, கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளவர்களின் பெயர் மற்றும் விவரங்கள் வவுனியா செயலகத்தில் காட்சிப்படுத்தப்படும். வன்னி சென்று திரும்பிய தமிழ்த்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் குழுவுக்கும் ஜனாதிபதியின் சிரேஷ்ட ஆலோசகரும் வடக்கு மீள்குடியமர்வு மற்றும் அபிவிருத்திக்குமான ஜனாதிபதி செயலணியின் தலைவருமான பஸில் ராஜபக்ஷவுக்கும் இடையில் நேற்று இடம் பெற்ற சந்தப்பில் இதற்கான முடிவு மேற்கொள்ளப்பட்டது.நேற்றுமுன்தினம் வவுனியாவில் உள்ள நலன்புரி நிலையங்களுக்குச் சென்ற தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் எழுவர் கொண்ட குழு, நேற்று பஸில் ராஜபக்ஷவைச் சந்தித்துக் கலந்துரையாடியது.
அகதி முகாம்களில் உள்ள மக்களின் பிரச்சினைகள் தொடர்பாக நேற்றைய சந்திப்பில் தாங்கள் விவரமாக எடுத்து விளக்கியதாக அக்குழுவில் அங்கம் வகித்த என்.சிறிகாந்தா எம்.பி. தெரிவித்தார். நேற்றைய சந்திப்பில் இணக்கம் காணப்பட்ட விடயங்கள் தொடர்பாக அவர் தெரிவித்தவையாவது:
*இந்தச் சந்திப்பில் பஸில் ராஜபக்ஷ வுடன் நீதி அமைச்சர் மிலிந்த மொற கொடவும் பங்குபற்றினார். நலன்புரி நிலையங்களில் தங்கியுள்ள மக்களின் குறைபாடுகள், பிரச்சினைகள் தொடர்பாக விளக்கமளித்தோம். பின்வரும் கோரிக்கை களை அவரிடம் முன்வைத்தோம்.*முகாம்களில் இருந்து விடுவிக்கப் பட்டு மீள்குடியமர்ந்தவர்களைக் கைது செய்யும் செயற்பாடுகள் சாவகச்சேரியில் முன்னெடுக்கப்பட்டுள்ளன. இடம்பெயர்ந்து முகாம்களில் தடுத்து வைக்கப்பட்டு முழு விசாரணைகள் முடிவுற்ற நிலையில் மீள் குடியமர்த்தப்பட்டவர்கள், தொல்லைகள் எதுவும் இன்றி வாழ அனுமதிக்க வேண் டும். இதற்கான நடவடிக்கையை முன்னெ டுக்குமாறு வலியுறுதித்னோம்.* இடம்பெயர்ந்த மக்கள் வாழும் நலன்புரி நிலையங்களில் தங்கியிருப்பவர்களைக் கைது செய்யும் போது, அவர்களது உறவினர்களுக்கு "ரசிது" வழங்க வேண்டும்.* முகாம்களில் உள்ளவர்களுக்கு அரிசி, கோதுமை மா, பருப்பு, சீனி ஆகியவற்றுடன் மேலதிகமாக மரக்கறி வகைகளை வழங்க வேண்டும்.*போதியளவு பால்மா கிடைக்க ஏற்பாடு செய்யவேண்டும்.மீளக்குடியமர்ந்தவர்களுக்குப் போது மான அளவு கொடுப்பனவு வழங்க வேண்டும் என்றும் வலியுறுத்தினோம்.
A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)
Subscribe to:
Post Comments (Atom)
Blog Archive
-
▼
2009
(47)
-
▼
November
(6)
- Srikantha, Kisshor deny plotting crossover...
- முகாம்களில் வைத்து கைது செய்யப்பட்டோர் விவரம் வவுன...
- “TNA Satisfied with IDP Resettlement” – MP Sri Kan...
- Names of detained prisoners will be out soon - Min...
- TNA leaders see IDP camps, express relief, call fo...
- தமிழ் தேசியக் கூட்டமைப்புக்குள் பிளவு ஏற்படும் நில...
-
▼
November
(6)
No comments:
Post a Comment