| மிழினத்திற்கு அரசியல் ரீதியிலான தீர்வை வழங்கி வேண்டுமென்ற எண்ணம் இருந்தால் ஏன் பல இலட்சம் படையினர்? - ஸ்ரீகாந்தா எம்.பி |
| [ புதன்கிழமை, 21 ஒக்ரோபர் 2009, 05:30.48 AM GMT +05:30 ] |
ஜனாதிபதித் தேர்தலில் எதிர்க்கட்சிக் கூட்டமைப்பின>ன் பொது வேட்பாளராக ஜெனரல் சரத் பொன்சேகாவை முன்னிறுத்தும் முயற்சிகளை கடுமையாக எதிர்க்கின்றோம். தொடர்ந்து அவர் உரையாற்றுகையில், யுத்தம் ·முடிந்துவிட்டது. இதனால் வெற்றிக்களிப்பில் இருப்பதாக அமைச்சர் சரத் அமுனுகம தெரிவித்தார். இது இரண்டு நாடுகளுக்கு இடையில் நடைபெற்ற யுத்தமல்ல. படையினர், போராளிகள் உட்பட இவர்களுக்கு இடையே சிக்கி மரணமாகிய அனைவரும் எமது நாட்டு மக்கள். எனவே, மகிழ்ச்சியடைய முடியாது. இந்த யுத்தத்தால் பல்லாயிரக்கணக்கான தமிழ் மக்கள் உயிரிழந்தனர். பெற்றோர்களை இழந்தனர். சிங்கள இராணுவ வீரர்களின் இறப்பாலும் அக் குடும்பங்கள் பாதிக்கப்பட்டன. இந்த முப்பது வருடகால யுத்தத்தில் வடபகுதி மக்கள் அபிவிருத்தியை காணவில்லை. அம்மக்களின் பொருளாதாரம் அபிவிருத்தி செய்யப்பட வேண்டும். யுத்தம் முடிவுற்ற நிலையில் பல இலட்சம் இராணுவத்தினரை ஏன் இன்னமும் வைத்துப் பராமரிக்க வேண்டும்? எனவே, பல கோடி ரூபாய்களை படையினருக்கு செலவழிக்காது படையினரின் எண்ணிக்கையை படிப்படியாக குறைத்து அவர்களது சு·கமான வாழ்வுக்கு வழிவகுக்க வேண்டும். அதைவிடுத்து வடக்கில் நிரந்தர இராணுவ ·காம்களை நிலையாக அமைப்பது இதற்குத் தீர்வு கிடையாது. இராணுவமும் இன்று அரசியல் மயமாக்கப்பட்டுள்ளது. கடந்த காலங்களில் இராணுவப்புரட்சிகள் முறியடிக்கப்பட்டன. இலங்கையில் இராணுவப் புரட்சி ஏற்படும் நிலையுண்டா என வெளிநாட்டு பிரதிநிதிகள் அண்மையில் என்னிடம் கேட்டார்கள். இதனை மறுத்தேன். ஏனெனில் ஜனாதிபதிக்கு சிங்களவர் மத்தியில் வரவேற்பு உள்ளது. இன்று ஜனாதிபதித் தேர்தலில் ஜெனரல் சரத்பொன்சேகா போட்டியிடுவதாக எதிர்க்கட்சிகள் தெரிவிக்கின்றன. எனவே, இராணுவத்தை அரசியலில் இணைப்பது தவறானதாகும். ஓய்வுபெற்ற பின்னர் போட்டியிட்டால் பரவாயில்லை. ஆனால், ஜெனரலாக பதவி வகிக்கும் சரத் பொன்சேகாவை அரசியலில் இணைக்கக்கூடாது. ரணில் விக்கிரமசிங்க சிறந்த தலைவர். ஆனால், இராணுவத்துறை சார்ந்தோரை அரசியலில் உள்ளீர்ப்பது பிழையான விடயமாகும். வடக்கின் வசந்தம் வருவதற்கு முன்பே மழைக்காலம் ஆரம்பமாகவுள்ளது. இரண்டு இலட்சத்திற்கும் மேற்பட்ட மக்கள் ஆபத்துக்களை எதிர்நோக்கியுள்ளனர். இது தொடர்பாக அரசாங்கம் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். |
A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)
Wednesday, October 21, 2009
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment