தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் வரும் திங்கள் கிழமை ஜனாதிபதியை சந்திக்கவுள்ளனர்
தமிழ் தேசியக் கூட்டமைப்பு எதிர் வரும் திங்கள் கிழமை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவுடன் இடம் பெறவுள்ள சந்திப்பின் போது அக் கட்சியின் சார்பில் தலைவர் இரா .சம்பந்தன் தலைமையில் 7 பேர் கலந்து கொள்ளவிருக்கின்றனர்
நேற்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்றக் குழு கூடி இது தொடர்பான தீர்மானததை எடுத்துள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் இலங்கை தமிழரசு கட்சி சார்பில் மாவை சேனாதிராஜா ,ஈ.பி.ஆர்.எல்.எப். சார்பில் சுரேஸ் பிரேமச்சந்திரன் ,டெலோ சார்பில் என்.ஸ்ரீகாந்தா ஆகியோருடன் நாடாளுமன்ற உறுப்பினர்களான தங்கேஸ்வரி கதிர்காமர் ,சிவசக்தி ஆனந்தன் மற்றும் ஐ.எம்.இமாம் ஆகியோரே மேற்படி நாடாளுமன்ற உறுப்பினரகள் ஆவர.
அகில இலங்கை தமிழ் காங்கிரசைச் சேர்ந்த கஜேந்திரன் பொன்னம்பலம தற்போது வெளி நாட்டில் தங்கியிருப்பதால் இக் குழுவில் இடம் பெறவில்லை என தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரொருவர் தெரிவித்தார்
ஜனாதிபதியுடன் இடம் பெறவிருக்கும் சந்திப்பில் பேச வேண்டிய விடயங்கள் குறித்து நேற்று கட்சி பாராளுமன்ற உறுப்பினர்கள் கூடி ஆராய்ந்ததாகவும் ,
இடம் பெயர்ந்த வன்னி மக்களின் மீள் குடியேற்றம் ,1990 ல் யாழ்ப்பாணத்திலிருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம்களின் மீள் குடியேற்றம்,சிறைச்சாலைகளிலுள்ள தமிழ் அரசியல் கைதிகளின் விவகாரம் ,அண்மைக் காலமாக வடக்கு கிழக்கில் இடம் பெற்று வருவதாகக் கூறும் அத்து மீறிய குடியேற்றங்கள் போன்ற விடயங்களுடன் அரசியல் தீர்வு தொடர்பாகவும் பேசுவதென்றும் அக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பாக மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது
No comments:
Post a Comment