A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Saturday, April 11, 2009

போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்தால்...

போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்தால் மட்டுமே அதனுடன் பேச்சு நடத்தலாம். கூட்டமைப்புக்கு கிடைத்த அழைப்புக்குப் பதில்.
[11 ஏப்ரல் 2009, சனிக்கிழமை 3:45 மு.ப இலங்கை]
uthayan.com

இலங்கைப் பிரச்சினை தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்துவதற்கு வருமாறு இந்திய அரசு விடுத்த அழைப்பை தமிழ்த் தேசிய கூட்டமைப்பு நிராகரித்துள்ளது.
வன்னியில் மக்கள்படும் அவலங்களுக்கு முடிவுகட்டக் கூடிய விதத்தில் போர் நிறுத்தம் கொண்டுவர இந்தியா ஏற்பாடு செய்யும் பட்சத்தில் மட்டுமே நாம் இந்தியாவுடன் பேச்சு நடத்தத் தயாராக இருக்கிறோம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர் என். சிறிகாந்தா மேற்கண்டவாறு தெரிவித்தார்.இனப்பிரச்சினை தொடர்பாக பேச்சு நடத்த வருமாறு இந்திய வெளியுறச் செயலர் சிவ்சங்கர் மேனன் கூட்ட மைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தார்.இந்த அழைப்பை நிராகரிப்பதாக தெரிவித்த நாடாளுமன்ற உறுப்பினர் என்.சிறிகாந்தா மேலும் கூறியதாவது:வன்னியில் தமிழ் மக்கள் பெரும் துன்பங்களை அனுபவித்துத்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையில் இனப்பிரச்சினை குறித்துப் பேசுவதற்கு கூட்டமைப்புத் தயாரில்லை.
வன்செயல்களும், படுகொலைகளும் நிறுத்தப்பட வேண்டும். அங்கு போர் நிறுத்தம் உடன் நடைமுறைக்கு கொண்டுவரப்பட வேண்டும்.
வன்னியில் இடம்பெறும் வன்செயல்களுக்கு பின்னணியில் இந்தியா இருப்பதாக குற்றச்சாட்டுக்கள் எழுந்துள்ளன. அவை உண்மையானால் இந்தியாவால் வன்செயல்களையும் நிறுத்த முடியும்.
வன்செயல்கள், கொலைகள் நிறுத்தப்பட்டு, போர் நிறுத்தம் கொண்டு வரப்பட்டால், இந்தியாவின் அழைப்பை ஏற்று பேச்சு நடத்தலாம்.
இந்தியாவில் தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில் விடுக்கப்பட்டுள்ள இந்த அழைப்பை உள்நோக்கம் கொண்டதாக கூட்டமைப்பு கருதுகின்றது என்றார்.