A Catalogue of articles found on the internet about Tamil National Alliance Parliamentarian Mr.N.Srikantha (all the sources are acknowledged - If you don't want us to reproduce please let us know by leaving a comment)

Thursday, January 1, 2009

இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடு

இந்திய மத்திய அரசின் ஈழத்தமிழர் தொடர்பான நிலைப்பாடு:
SOURCE: http://orupaper.com/node/382

மாற்றம் வரும் - சிறிக்காந்தா
மாற்றம் ஏற்பட்டே ஆகவேண்டும் - வைகோ

ஈழத்தமிழர்களின் நிலை தொடர்பாக தமிழக மக்களிடையே உணர்வலைகள் நாளாந்தம் அவர்களால் நடாத்தப்படும்; அமைதிப்போராட்டங்களின் மூலம் வெளிப்படுத்தப்பட்டு வருகிறது. தனித்து அரசியற்கட்சிகளினதும் அவர்களது ஆதரவாளர்களுடன் அடங்கிவிடாமல். தொழிலாளர்கள். கலைஞர்கள், தகவல் தொழினுட்ப வல்லுனர்கள், வலுவிழந்தோர் என தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் போராட்டங்கள் முன்னெடுக்கப்ட்டுவருகின்றன. இந்நிலையில் தமிழ்நாட்டு மக்களின் போராட்டங்கள் இந்திய நடுவண் அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தினை ஏற்படுத்துமா எனற் வினா இயல்பாகவே எழுகின்றது.

இதுபற்றிய கருத்தறிவதற்காக. இவ்வாரம் லண்டனுக்கு வருகை தந்திருக்கும் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக்கழக்கத்தின் தலைவர் திரு. வை.கோ. அவர்களை நேரில் சந்தித்தோம். அதே சமயம் தற்போது இந்தியாவில் தங்கியிருந்து பலமட்டங்களிலும் உள்ள அரசியல் தலைவர்களை சந்தித்துவரும் தமிழ்தேசியக் கூட்டணி நாடாளுமன்ற உறுப்பினர் திரு. சிறிக்காந்தா அவர்களுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு வினாவினோம். இவ்விரு தலைவர்களும் தெரிவித்த கருத்துக்களை இங்கு உங்களுடன் பகிர்ந்து கொள்கிறோம்.

திரு. வை. கோபாலசாமி

வைகோ, கோபி
ஈழத்தமிழர்களுக்கு மிகவும் சோதனையான ஒரு காலகட்டமான இன்றய நிலையில், தமிழ்நாட்டு மக்கள் காட்டிவரும் ஆதரவும். ஆதனை வெளிக்காட்டுவதற்கா நடாத்தப்படும் போராட்டங்கள், புலம்பெயரந்நத தமிழர்களுக்கு ஆறுதலைத் தருகின்றன. இவ்விடயத்தில் மத்திய அரசு தலையிடவேண்டும் என அதற்கு காலக்கெடு விதித்து அவ்விதம் தமது கோரிக்கைகள் நிறைவேறறுப்படாவிடில் தமது பதவிகளை விலகப்போவதாக தமிழ்நாட்டை பிரதிநிதித்துவப்படுத்தும் பாராளுமன்ற உறுப்பினர்கள் தெரிவித்தபோது. ஏதோ ஆக்கபூர்வமான விடயம் நடைபெறப்போகிறது என ஈழத்தமிழர்கள் அகமகிழ்ந்திருந்தனர். ஆனால் அந்த விடயத்தில் உறுதிப்பாடில்லாமல் விடயம் பிசுபிசுத்துப்போனதனால், தமிழ்நாட்டு தலைவர்கள் இவ்விடத்தில் உறுதியாக இல்லை எனற சந்தேகம் மேலோங்கியுள்ளது. அது தொடர்பாக நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?

ஈழத்தமிழர் பிரச்சனையில், நியாய விரோதமாக, இன்னும் சொன்னால் பெரும் அநீதியாக சிங்கள அரசுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக மத்தியில் ஆட்சி நடாத்தி வருகிற மன்மோகன்சிங் அரசு ஆயுத உதவியும் உதவியும், நிதி உதவியும் வழங்கி, ஒப்பந்தங்களைப்போட்டு இப்போது நடக்கின்ற போரை பின்னாலிருந்து இயக்கி வருகிறது இதற்கு ஆதரபூர்வமாக நான் குற்றஞ்சாட்டி வருகிறேன். இந்த நிலையில் தமிழகத்தில் ஒரு பேரெழுச்சியும், பெரும் கொந்தளிப்பும் ஏற்பட்ட நிலையில். அது மத்தியில் உள்ள அரசுக்கும் அதில் பங்குவகிக்கிற கட்சிகளுக்கும் எதிராக திரும்பிவிடக்கூடாது என்கிற கவலையில் திடிரென முதலமைச்சர் போர்நிறுத்தம் பதினான்கு நாட்களுக்குள் செய்யப்படாவிடில் 39 நாடாளுமன்ற உறுப்பினர்களும் இராஜினாமாச் செய்வார்கள் என்று அறிவித்தார். ஆனால் போர் நிறுத்தம் செய்யும்படி அவர் பிரதமரையும் வற்புறுத்தவில்லை, பிரதமர் இதனை இராஜபக்சவிடம் சொல்லவில்லை எனபதனை இராஜபக்சவே கூறிவிட்டார். ஆக இராஜினாமா என்ற அறிவிப்பும் பத்திரிகைச் செய்திகளும் வந்தனவே தவிர, உண்மையில் அதனைச் செயலற்படுத்த வேண்டும் என்ற எண்ணம் அறிவித்தவருக்கு இல்லை. இதுதான் உண்மை. இதைப்பற்றி புலம்பெயர்ந்துள்ள தமிழர்கள் கவலைப்படவேண்டியதில்லை. ஏனெனில் மக்கள் எழுச்சி வருகிறபோது அதற்கு அணைபோடவும் முடியாது, அதற்கு எதிராக யாரும் செயற்படவும் முடியாது. அந்த மக்கள் எழுச்சிதான் இந்த இராஜினாமா அறிவிப்பினை செய்யவைத்தது. இன்னும் இரண்டு மாதமோ, மூன்றுமாதமோ நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுவிடும். ஆனால் இந்த எழுச்சி நிரந்தரமாக இருக்கும். இதனுடைய விழைவு இனிமேல் மத்தியிலே எந்த அரசு வந்தாலும், தமிழர்களுக்கு எதிராக, சிங்களவர்களுக்கு ஆதரவுநிலை எடுக்கவிடாதளவுக்கு தமிழ்நாட்டு மக்களின் ஆதரவும் அனுதாபமும், ஈழத்தமிழ் மக்கள் பக்கமிருக்கிறது.

ஈழத்தமிழர்கள் வேறு, விடுதலைப்புலிகள் வேறு அல்ல. ஈழத்தமிழர்களின் காவலரண்தான் விடுதலைப்புலிகள். விடுதலைப்புலிகளை தாங்கும் தாய்மடிதான் ஈழத்தமிழர்கள். இதுதான் இன்றைக்கு இருக்கக்கூடிய உண்மையான நிலமை.

தமிழ்நாட்டு மக்களின் போராட்டம் இப்போது அடிமட்டத்தில் நடைபெறுகிற அளவுக்கு வியாபித்துவருகிறது. இந்நிலையில் .இந்திய மத்திய அரசு தனது நிலைப்பாட்டில் தளர்ச்சியைக் காட்டுமா?

மத்திய அரசு சிங்கள அரசினுடைய இராணுவநடவடிக்கைகளுக்கு பலவகையில் உதவி செய்து வந்திருக்கிறது. அதனை தடுத்து நிறுத்துவதற்கு தமிழகத்தில் ஏற்பட்டிருக்கும் இந்த எழுச்சி பயன் படும் என நான் நம்புகிறேன்.

இது கொள்கை வகுப்பாளர்கள் விடயத்திலும் பொருந்துமா? அவர்கள் தமது கொள்கைகளை மாற்றுவார்களா?

மத்தியில் உள்ள ஆட்சி நிலையானது அல்ல..

ஆனால் கொள்கை வகுப்பாளர்கள் ஒரளவுக்கு நிலையானவர்களாக இருப்பார்களே?

இந்த தவறான கொள்கைகளை வகுத்தவர்களும் இனி தொடர்ந்து கொள்கை வகுக்கின்ற இடத்தில் இருக்கமாட்டார்கள் என்பது என்னுடைய நம்பிக்கை.

அப்படியானார் இனி வரும் அரசு இவ்விடயத்தில் எமக்கு சாதகமாக நடந்து கொள்ளுமா?

தமிழ் நாட்டில் ஏற்பட்டிருக்கிற கொந்தளிப்பும் எழுச்சியையும் கண்டாவது இனிமேல் யார் ஆட்சிக்கு வந்தாலும் சரி. எவர் பொறுப்புக்கு வந்தாலும், சிங்கள அரசுக்கு ஆதரவான ஒரு நிலைப்பாட்டை மேற்கொள்ளத் துணியமாட்hர்கள், மேற்கொள்ள மாட்டல்கள் என நிட்சயமாக நான் நம்;புகிறேன். தமிழ்நாடு மட்டுமல்ல, இந்தியா பூராவுமே ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான உணர்வு உருவாகி வருகிறது. அது இன்னமும் பல மடங்கு அதிகரிக்கும்.

புலம்பெயர்ந்த தமிழ் மக்கள் பலவருடங்களாக இங்கு பல்வேறு அமைதிவழிப் போராட்டங்களை மேற்கொண்டுவருகிறார்கள். தங்களது கோரிக்கைகள் உரியவர்களினால் கவனத்தில் எடுக்கப்படவில்லை என்ற ஒருவித சலிப்பும் அவர்களிடமுள்ளது. இந்நிலையில் அவர்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

இப்படிப்பட்ட போராட்டக்களங்களில், சில வேளைகளில் உடனடி வெற்றி கிடைக்கவில்லை என்ற சலிப்பு ஏற்படக்கூடும் அந்தச் சலிப்பு பிரசவ கால வேதனையில் ஏற்படுகின்ற பிடிவாத முடிவுகள்போல இருக்குமே தவிர நிலமை மாறுகிறபோது, இப்போது தமிழ்நாட்டில் எத்தகைய பெரிய எழுச்சி ஏற்பட்டிருக்கிறது. நிச்சயமாக போர்முனையிலும் நல்ல செய்திகள் வரும். ஆகவே இவ்வளவுகாலமும் ஆதரவு கொடுத்துவந்த புலம்பெயர்ந்த மக்கள் இனி உங்கள் சந்ததிகளாவது ஒரு சொந்த மண்ணில். சொந்த நாட்டில் சுதந்திர உரிமை பெற்ற நாட்டில் வாழவதற்குரிய கடமையை நம் காலத்தில் செய்யவேண்டும் என்ற நோக்கத்தில, அங்கே இருப்பவர்கள் உயிரையும் கொடுத்து உதிரத்தையும் சிந்துகிறபோது, நம்மால் இயன்றளவு தார்மீக ஆதரவாவது கொடுக்க வேண்டிய கடமையை தமிழனாகப்பிறந்த, தமிழிச்சியாக பிறந்த ஒவ்வொருவரும் செய்யவேண்டும் என்ற உணர்வோடு புலம்பெயர்ந்த தமிழர்கள் அந்தக்கடமையை தொடர்ந்து செய்யவேண்டும்; செய்வார்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன்.

திரு.சிறீக்காந்தா

தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற எழுச்சி பற்றி?


[Sri Kantha]
தமிழ்நாட்டில் இப்போது ஏற்பட்டிருக்கிற எழுச்சியை 1965 இல் இந்தி எதிர்ப்புப்போராட்டத்தின்போது, அதற்குபின்னர் 1983ல் இலங்கையில் ஏற்பட்ட இனக்கலவரத்தினைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் ஏற்பட்ட அநுதாப அலை போன்றவற்றுடன் ஒப்பிடலாம். பல்வேறு அரசியற்கட்சிகளைச் சேர்ந்தவர்கள், தொழிற்சங்கங்கள், மனிதவுரிமை அமைப்புக்கள், சமூக அமைப்புக்கள் என்பன ஈழத்தமிழர்களுக்கு ஆதரவான போராட்டங்களை மேற்கொண்டு வருகின்றன.

தற்போது தேசியகட்சிகள்கூட இவ்விடயத்தில் அக்கறை காட்டுகின்றன. இந்திய கொம்யூனிஸ்ட் கட்சி. பாரதிய ஜனதா கட்சி போன்றனவும் தமது ஈடுபாட்டை வெளிப்படுத்தி வருகின்றன. பாரதிய ஜனதாக்கட்சியின் தமிழ்நாடு மாநிலத் தலைவர் இல. கணேசன், தமது கட்சி ஆட்சிக்கு வந்தால் ஆறமாதகாலத்தில் இப்பிரச்சனை தீரக்கப்படும் எனத் தெரிவித்துள்ளார். கொங்கிரஸ கட்சியின் தமிழ்நாடு மாநிலத்தலைவர் தங்கபாலு அவர்கள்;கூட இலங்கைத்தீவில் யுத்தநிறுத்தம் ஏற்படவேண்டும் எனக்குறிப்பிட்டுள்ளார். தேசியக்கட்சிகளின் ஈடுபாட்டை இவைகாட்டிநிற்கின்றன.

இவை இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துமா?

இன்னும் சில மாதங்களில் பாராளுமன்றத் தேர்hலை எதிர்நோக்கியிருக்கிற நிலையில் அரசியற்கட்சிகள், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கிற எழுச்சியை ஒதுக்கிவிடமுடியாது. முனிதாபிமான அடிப்படையிலாவது, இலங்கையில் யுத்தநிறுத்தம் ஏற்படவேண்டும் என்ற கோரிக்கை வலுப்பெற்றுவருகிறது. தமிழர் பிரச்சனைக்கு அரசியல் தீர்வு, விடுதலைப்புலிகள் விடயத்தில் இராணுவத்தீர்வு என்ற தற்போதைய நிலைப்பாட்டில் விரைவில் மாற்றம் ஏற்படுமென எதிர்பார்க்கிறேன்.

இந்திய அரசு உத்தரவாதமளிக்குமாயின் போர் நிறுத்தம் செய்வதனை தாம் எதிர்க்கப்போவதில்லை என இனவாத அமைப்பான ஐhதிக ஹெல உரிமைய தெரவித்துள்ளது பற்றி..

இவ்விதம் அவர்கள் கூறும்போது அதற்கு பின்னால் உள்ள விடயங்களையும் அவர்கள் உணரந்து கொண்டுதான் பேசுகிறார்கள் என நம்புகிறேன். இந்தியா போர்நிறுத்த்திற்கு உத்தரவாதம் தருவதானால். சம்பந்தப்பட்ட இரண்டு தரப்புடனும் அது பேச்சுக்களை நடாத்தவேண்டும். இதற்கு தமது நாட்டில் தமீழீழ விடுதலைப்புலிகள் மீது விதித்திருக்கும் தடையை நீக்கவேண்டும். அவ்விதம் இந்தியா செய்யாது என்ற நம்பிக்கையில் அவர் அவ்விதம் கூறியிருக்கக்கூ:டும்.

இந்திய மத்திய அரசின் நிலைப்பாட்டில் மாற்றம் ஏற்படினும், கொள்கை வகுப்பாளர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றுவார்களா?

நீங்கள் யாரைக்குறிப்பிடுகிறீர்கள் என்று தெரிகிறது. கடந்த காலங்களிலிருந்த காழ்ப்புணர்வுகளை விடுத்து, விருப்பு வெறுப்புக்களை தாண்டி முடிவுகளை எடுக்கவேண்டிய நிலைக்கு அவர்கள் தள்ளப்படுவார்கள் என எதிர்பபாரக்கிறேன். இது ஒரு சிக்கலான பிரச்சனை சம்பந்த பட்ட பல்வேறு தரப்பும் பல்;வேறு தளங்களில் இயங்குகின்றன. அவர்களது அபிலாசைகளில் ஒற்றுமை வேற்றுமைகளிருக்கிறது. ஆகவே தனித்து முடிவுகளை மேற்கொள்ள முடியாது எனபதனை சம்பந்தப்பட்டவர்கள் உணரவேண்டும்.

No comments:

Post a Comment